Skip to main content
அரிசியில் வண்டுத் தொல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அரிசியில் வண்டுத் தொல்லை - என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -
பள்ளி விடுமுறையில் நீண்ட பயணமா?

வீட்டில் சில உணவுப் பொருள்களை வைத்துச் செல்ல வேண்டியிருக்கலாம்.

அவற்றில் வண்டு வராமல் இருக்க என்ன செய்வது?

வண்டுகள் மிகவும் சிறியவை... சுமார் 2 முதல் 3 மில்லிமீட்டர் அளவில் தான் இருக்கும்.

அவை பொதுவாக அரிசியில் காணப்படுகின்றன.

அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை.

சமைப்பதற்கு முன்பு அரிசியைத் தண்ணீரில் கழுவும்போது அவற்றை அகற்றிவிடலாம்.

இருப்பினும் சில பழக்க வழக்கங்களைக் கொண்டு அரிசியில் வண்டுகள் வருவதைக் குறைக்க முடியும்.

என்னென்ன செய்யலாம்?

🌾 இறுக்கமாக மூடப்பட்ட பாத்திரத்தில் அரிசியை வைத்து, ஈரப்பதம் இல்லாத, குளிர்ந்த இடத்தில் அதை வைப்பது.

🌾 தேவைக்கேற்பக் குறைவான அளவு அரிசியை வாங்குவது.

🌾 தேவைப்படும்போது அரிசிப் பொட்டலத்தைத் திறப்பது.

🌾 திறந்த அரிசிப் பொட்டலத்தை ஒரு மாதத்திற்குள் சாப்பிட்டு முடிப்பது.

🌾 குளிர்சாதனப் பெட்டியில் அரிசியை வைப்பது.

🌾 பாத்திரத்தில் உள்ள அரிசி முடிந்ததும் அந்தப் பாத்திரத்தைக் கழுவிக் காய வைத்த பின் அதில் மீண்டும் அரிசியைக் கொட்டுவது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்