Skip to main content
ஊரைச் சுற்றும் 60 வயதுப் பெண்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஊரைச் சுற்றும் 60 வயதுப் பெண்

வாசிப்புநேரம் -

60 வயது....

சீனாவைக் காரில் வலம் வருகிறார் சூ மின் (Su Min).

பெண்களுக்கு முன்மாதிரியாகியாகத் திகழும் சூ அண்மையில் BBC செய்தி நிறுவனத்தின் ஆகச் சிறந்த ஊக்கமளிக்கும் 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அவரை வைத்து ஒரு திரைப்படம் கூட வந்துள்ளது.

இளம் வயதிலேயே (20 வயதுகளில்) திருமணம் புரிந்தார் சூ.

திருமணத்தில் நிம்மதி இல்லை என்றாலும் குடும்பத்துக்காக அதைச் சகித்துக்கொண்டிருந்தார்.

2020இல் அனைத்தையும் துறந்துச் செல்ல முடிவெடுத்தார்.

ஒரு காரில் ஏறிய சூ சீனாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

சமூக ஊடகத்தில் அவருடைய பயணத்தைப் பற்றிய பதிவுகளையும் செய்தார்.

இப்போது 4 ஆண்டுகளாகிவிட்டன.  அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

"இல்லத்தரசியாக யாரும் என்னைக் கவனித்ததில்லை. இப்போது நான் வீதிகளில் நடந்தால் சிலருக்கு என்னைத் தெரியும். ஓர் அங்கீகாரம் கிடைத்த உணர்வு" என்று BBCஇடம் சூ சொன்னார்.

கடந்த ஆண்டு சூவின் மண விலக்கு உறுதியானது.

இல்லத்தரசியாகவே வீட்டுக்குள் இருக்காமல் பிடிக்காத பொறுப்புகளைத் துறந்து ஒரு பறவையைப் போல ஊர் சுற்றி மகிழும் சூவைப் பலரும் ஆதரிக்கின்றனர். 

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்