Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சக மாணவருக்கு செயற்'கை' உருவாக்கி புது வாழ்க்'கை' அமைத்துக் கொடுத்த நண்பர்கள்

வாசிப்புநேரம் -

தன் கையே தனக்கு உதவி..

ஆனால் சொந்தக்கை ஒழுங்காக இயங்கவில்லை என்றால்?

அமெரிக்காவின் டென்னஸ்ஸி (Tennessee) மாநிலத்தைச் சேர்ந்த சர்ஜியோ பெரால்தாவிற்குப் (Sergio Peralta) பிறப்பிலேயே சோதனை. 

அவரது வலது கை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. 

ஆகையால் காரியங்களைச் சாதிக்க இடது கையை நம்பி இருந்தார் சர்ஜியோ. 

இவ்வாண்டு அவர் புதுப் பள்ளியில் சேர்ந்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

அப்போது சர்ஜியோவின் மனத்தில் பதற்றம்.

சராசரி பதின்ம வயது இளையருக்கு இருக்கும் சவால்களோடு கை முழுமையாக வளர்ச்சி அடையவில்லை எனும் சிக்கலும் சேர்ந்துகொண்டது. 

அதனை சர்ஜியோ மூடி மறைக்கப் பார்த்தார். 

ஆனால் அவரது சிக்கலை உணர்ந்த அவரது ஆசிரியர் தமது வகுப்பு மாணவர்களைப் திட்டப்பணி ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

அவர் மாணவர்களைச் செயற்கை இயந்திரக் கை ஒன்றை உருவாக்கச் சொன்னதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

மாணவர்களோ களத்தில் இறங்கி அதனை வெற்றிகரமாக முடித்துக் காட்டினர். 

திட்டப்பணியின் போது சர்ஜியோ எல்லோருடனும் பழகத் தொடங்கினார். 

ஒரு மாதத்துக்குப் பிறகு, சர்ஜியோவுக்கு மாணவர்கள் செய்த கை பொருத்தப்பட்டது. 

கை உருவாக்கி வாழ்க்கை அமைத்துக் கொடுத்த நண்பர்களை நினைத்து நெகிழ்ந்துபோனார் சர்ஜியோ. 

மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்கவேண்டும் என்ற பண்பையும் புகட்டியதில் ஆசிரியருக்கு அளவில்லா மகிழ்ச்சி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்