'Roti John' சிங்கப்பூருக்குச் சொந்தமா, மலேசியாவுக்குச் சொந்தமா?

TikTok/@padubebstudios
பிரெஞ்சு பேகட் (baguette) ரொட்டியில் முட்டை, இறைச்சி, சாஸ்.
'ரொட்டி ஜான்' மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மிகவும் பிரபலமான உணவுவகை.
அது சிங்கப்பூருக்குச் சொந்தமா, மலேசியாவுக்குச் சொந்தமா என்று இணையவாசிகள் விவாதித்துள்ளனர்.
TikTok தளத்தில் இருநாட்டு ரொட்டி ஜான் உணவையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்தது, விவாதத்தைத் தொடங்கியது.
மலேசியாவின் ரொட்டி ஜான் உணவில் அதிகமான சாஸ் பயன்படுத்தப்படுவதாக @padubebstudios என்று அறியப்படும் இணையவாசி சொன்னார்.
'ரொட்டி ஜான் உணவு மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரொட்டி ஜான் அப்படித்தான் இருக்கவேண்டும்,' என்று இணையவாசிகள் சிலர் கூறினர்.
மலேசியாவில் முதலில் வெள்ளை ரொட்டி பயன்படுத்தப்பட்டது..பின்னர் பேகட் ரொட்டிக்கு மாற்றப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.
இணையவாசிகள் சிலரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
'சிங்கப்பூரில்தான் பேகட் ரொட்டி பயன்படுத்தும் பழக்கம் தொடங்கியது.'
'ரொட்டி ஜான் சிங்கப்பூரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வேண்டுமென்றால் மூத்த தலைமுறையினரிடம் கேளுங்கள்!' என்று அவர்கள் கூறினர்.
தேசிய நூலக வாரியத்தின் தகவல்படி, சிங்கப்பூரில் ரொட்டி ஜான் 1960களில் விற்கப்படத் தொடங்கியது.
பர்கரைக் கேட்ட வெள்ளை இனத்தவருக்குப் பரிமாறப்பட்ட உணவு பின்னர் ரொட்டி ஜான் உணவானதாக அது கூறுகிறது.