Skip to main content
வேற்றுலகப் பிராணியைப் போல தோற்றமளிக்கும் மீன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வேற்றுலகப் பிராணியைப் போல தோற்றமளிக்கும் மீன்

வாசிப்புநேரம் -
ரஷ்ய மீனவர் ஒருவர் வேற்றுலகப் பிராணியைப் போல தோற்றமளிக்கும் மீனைப் பிடித்துள்ளார்.

ரோமன் ஃபெர்டோர்ட்ஸொவ் (Roman Fedortsov) என்ற அந்த ஆடவர், தாம் பிடிக்கும் விசித்திரமான கடல் உயிரினங்களின் படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடுவார்.

Instagramஇல் அவருக்கு 600,000க்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்தக் கருப்பு மீனின் உடல் முழுவதும் சுருக்கங்கள் இருந்தன. அதைப் பார்க்க மனித மூளையைப் போல இருந்தது.

அது குறித்து இணையவாசிகள் பல கருத்துகளைத் தெரிவித்தனர்.

"மீனைக் காண வேற்றுலகப் பிராணியைப் போல உள்ளது!" என்று பலர் கூறினர்.

"மீனின் தலையை வெட்டிவிட்டீர்களா?" என்று சிலர் நகைச்சுவையாக ஃபெர்டோர்ட்ஸொவ்விடம் கேட்டனர்.

விசித்திரமான தோற்றத்தைக் கொண்ட மீனின் பெயர் 'Bering Sea roundbelly fish' என்று அவர் கூறினார். அது கடலிலிருந்து வெளியேறிய பிறகு அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதால் அதன் உடல் வீங்கி உருமாறியதாகவும் விளக்கம் தந்தார்.
ஆதாரம் : Others/8 World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்