Skip to main content
"அதிருப்தியா? வாழ்க்கை முறையை மாற்றத் துணிந்து செயல்படுக!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"அதிருப்தியா? வாழ்க்கை முறையை மாற்றத் துணிந்து செயல்படுக!" - படகோட்டியான அமெரிக்கர்

வாசிப்புநேரம் -
வேலையில் அதிருப்தியடைந்த அமெரிக்கர் பதவியைத் துறந்துவிட்டுப் படகோட்டியாக மாறினார்.

தம் செல்லப் பூனை ஃபீனிக்ஸுடன் (Phoenix) திரு ஒலிவர் விட்ஜர் (Oliver Widger) படகில் ஆரெகன் மாநிலத்திலிருந்து ஹவாயிக்குச் சென்றார். தம் பயணத்தை அவர் TikTok ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அவருடைய TikTok காணொளிகளை நாள்தோறும் காண்கின்றனர்.

நான்கு வருடங்களுக்கு முன் பக்கவாதம் ஏற்படுத்தும் நோய் கண்டறியப்பட்டதால் அவர் தம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முனைந்தார்.

வருங்காலத் திட்டம் ஏதும் இல்லாமல் வேலையைத் துறந்தார். சேமித்த பணத்தை ஒரு படகிற்காகச் செலவு செய்தார். 10,000 வெள்ளி கடனும் இருந்தது. படகோட்டுவதில் அவருக்கு அனுபவமும் கிடையாது.

இவ்வளவு தடங்கல்கள் இருந்தும் ஏன் அவர் அந்த முடிவை எடுத்தார்?

"தினமும் கடுமையாக உழைத்தும் திருப்தியில்லை. அதனால் பிடிக்காத வேலையை விட்டுவிட்டு படகோட்டி ஆகினேன். அவ்வாறு செய்தது மற்றவர்களும் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்," என்றார் திரு விட்ஜர்.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்