Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பணவீக்கம்.....பணிநீக்கம்... பணத்தை எப்படிச் சேமிக்கலாம்?

வாசிப்புநேரம் -

பொருளியல் நெருக்கடி... 

வேலையின்மை அதிகரித்துகொண்டே போகிறது...

சிலர் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

மாதந்தோறும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவேண்டும். 

இந்நிலையில் இருப்போர் என்ன செய்யலாம்? இணையத்தில் கவனிப்பாளர்கள் வழங்கும் குறிப்புகள்? 

1. தேவையில்லாத செலவுகளைக் கண்டறிந்து அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்  

உதாரணத்திற்கு வெளியே உணவு வாங்குவதைவிட வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்.

டாக்ஸி, வாடகைக் கார் சேவைகளை நாடுவதற்குப் பதிலாகப் பொது போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம். 

வெளியூர் செல்லத் திட்டமிட்டால் விமான பயணச்சீட்டுகளை முன்கூட்டியே வாங்கிவிடலாம். 

2. எதையும் வாங்குவதற்குமுன் '5 நிமிடங்கள்' பொறுத்திருங்கள்!

பதறாத காரியம் சிதறாது... அவசரத்தில் யோசிக்காமல் பொருள்களை வாங்கவேண்டாம்...

பொருள்களை வாங்குவதற்குமுன் 5 நிமிடம் காத்திருங்கள். பொறுமையாக யோசித்து அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையானதா இல்லையா என்று முடிவெடுங்கள். 

3. செலவுகளையும் சேமிப்பையும் கண்காணிக்கத் தனித்தனியாக வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது நல்லது  

தினசரிச் செலவுகளுக்கு ஒரு வங்கிக் கணக்கை வைத்திருங்கள். 

சேமித்த பணத்தை இன்னொரு கணக்கில் வைத்தால் அதனை நீங்கள் அடிக்கடி அணுகமாட்டீர்கள். 

அவ்வாறு செய்யும்போது உங்கள் சேமிப்பு பணம் நாளடைவில் அதிகரிக்கக்கூடும். 

4. எதிர்காலத்திற்குத் திட்டமிடுவது முக்கியம்

செலவுகளைக் கூர்ந்து கவனிக்க வரவுசெலவுஙப் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாம். 

அதனை தாளில் எழுதலாம் அல்லது அதற்கான செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலும் குறிப்பிடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்