Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தென் கிழக்காசியாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே குழம்பு சமைக்கப்பட்டிருக்கலாம்: ஆய்வு

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசியாவில் குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முன் குழம்பு சமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தாளிப்புப் பொருள்களை அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 கருவிகள் அதற்கான தடயங்களை வழங்கியுள்ளன.

ஆய்வு முடிவுகள் Science Advances எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள Oc Eo தொல்பொருள் வட்டாரத்தில் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல் நூற்றாண்டுக்கும் 7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஃபுனான் (Funan) அரசாட்சியின் ஒரு பகுதியாக வட்டாரம் முன்பு திகழ்ந்தது.

வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் நுண்ணிய அளவில் தாவரத் துகள்கள் இருந்தன.

அவற்றில் அரிசி, மஞ்சள், இஞ்சி, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

ஜாதிக்காயின் நறுமணம் இன்னும் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாளிப்புப் பொருள்கள் ஒவ்வொன்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை.

தெற்காசிய வணிகர்களும் குடியேறிகளும் தென் கிழக்காசியாவுக்குக் குழம்பு செய்முறைகளைக் கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குழம்பு சமைக்கும் பழக்கம் இந்தியாவில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாகக் கூறப்பட்டது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்