Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புதிய வகை 'பேய் சுறா' கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
புதிய வகை 'பேய் சுறா' கண்டுபிடிப்பு

(படம்: National Institute of Water and Atmospheric Research, New Zealand)

நியூஸிலந்தில் புதிய ரக 'பேய் சுறா'வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் சுமார் 2,600 மீட்டர் ஆழத்தில் அது வாழ்வதால் அதைக் காண்பது மிக அரிது.

அந்தச் சுறா 'spookfish' அல்லது 'chimera' என்றும் அழைக்கப்படுகிறது.

அவற்றுக்குச் செதில்கள் இல்லை.

எலும்புக்கூடுகளில் மென்மையான எலும்புகள் உள்ளன.

இவ்வகை மீன்கள் மிக ஆழத்தில் வாழ்வதால் அவற்றைப் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. அதனால் இந்த மீனின் கண்டுபிடிப்பு உற்சாகத்தைத் தருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அந்த மீனுக்கு வித்தியாசமான நீள மூக்குப் பகுதி உள்ளது. அதன் உடலின் பாதி அளவுக்கு மூக்குப் பகுதியின் நீளம் இருக்கும்.

அது ஆஸ்திரேலியா, நியூஸிலந்துக் கடற்பகுதிகளில் வாழ்கிறது.

உயிரினங்களைக் கண்டுபிடிக்கும்போது அவற்றைப் பராமரித்துப் பேணும் வழிகளும் தெரிய வருகின்றன. அதனால் இத்தகைய கண்டுபிடிப்புகள் மிக முக்கியமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்