Skip to main content
1,000 ஆண்டுப் பழைமையான விதையை வளர்த்த ஆய்வாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

1,000 ஆண்டுப் பழைமையான விதையை வளர்த்த ஆய்வாளர்கள்

வாசிப்புநேரம் -
1980களில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலர் ஜுடென் (Judean) பாலைவனத்தில் ஒரு விதையைக் கண்டுபிடித்தனர்.

ஆண்டுகள் பல கடந்தன.

ஜெருசலத்தில் (Jerusalem) உள்ள இயற்கை மருந்து ஆராய்ச்சி நிலையத்தைக் கண்டுபிடித்த டாக்டர் சாரா சலோன் (Sarah Sallon) அவருடைய ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து அந்த விதை செடியாக வளருமா என்பதை ஆராய்ந்தார்.

5 வாரங்களுக்குப் பிறகு விதை துளிர்விட்டது.

ஆனால் அது சாதாரண விதை அல்ல.

சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையானது.

அந்தச் செடி வளர்ந்து இப்போது 10 அடி மரமாக நிற்கிறது.

ஆனால் அதில் பூக்களோ பழங்களோ இல்லை.

மரபணு (DNA) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த மரம் Commiphora genus எனும் இனத்தைச் சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆதாரம் : CNN

மேலும் செய்திகள் கட்டுரைகள்