கரப்பான் பூச்சியின் பால் முதல் மூக்கைச் சிந்துவது வரை... வித்தியாசமான அறிவியல் விருதுகள்!
வாசிப்புநேரம் -
படம்: Claudio Thoma/Keystone via AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வித்தியாசமான அறிவியல் ஆய்வுகளைக் கொண்டாடும் Ig Nobel விருதுகள் வியாழக்கிழமை 10 ஆய்வுக்குழுக்களுக்கு வழங்கப்பட்டன.
பயணச் சிக்கல்கள் காரணமாக 35 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு வெளியே விழா நடைபெற்றது.
சுவிட்சர்லந்தின் சூரிக் (Zurich) நகர மாநாட்டு நிலையத்தில் நிகழ்ச்சி நடந்தது.
கரப்பான் பூச்சிகளின் பாலை ஆராய்ந்தவர்களும் விருது பெற்றனர்.
உள்ளாடைகளைப் பயன்படுத்தி மண்ணின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
ஓர் ஆய்வுக்குழு 25க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,000 உள்ளாடைகளைப் புதைத்தது.
மண்ணிலுள்ள சிறு உயிரினங்கள் அவற்றை எவ்வாறு மக்கச் செய்கின்றன என்பதை அது ஆராய்ந்தது.
மூக்கைச் சிந்துவதன் அறிவியலை ஆராய்ந்த மறைந்த மருத்துவர் டோகுஜி உன்னோவுக்கும் (Tokuji Unno) விருது வழங்கப்பட்டது.
வழக்கம்போல் பார்வையாளர்கள் காகித விமானங்களை மேடையை நோக்கி வீசி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
அடுத்த ஆண்டு விழா பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் (Antwerp) நகரில் நடைபெறும்.

ஆதாரம் : AP