பிலிப்பீன்ஸ் சிறுவர்களுக்காகக் காலணிகளை ஏலம் விடும் பதக்கம் வென்ற தங்கமகன்

(படம்: AFP/Mohd Rasfan)
பிலிப்பீன்ஸின் எர்னஸ்ட் ஜோன் ஒபியேனா (Ernest John Obiena) நேற்று முன்தினம் (8 மே), தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கழியூன்றித் தாண்டும் (pole vault)போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருக்கும் ஒபியேனா பிலிப்பீன்ஸில் உள்ள சிறாருக்கு நிதி திரட்டுவதற்காக அவரின் காலணிகளை ஏலத்திற்கு விடுவதாகச் சொன்னார்.
வெற்றிவாகை சூடிய நேரத்தில் தாம் அணிந்திருந்த அந்தக் காலணிகளை எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் என அவர் கூறினார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் ஒபியேனா போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது காலணிகளின் மதிப்பு வரும் ஆண்டுகளில் உயரக்கூடும்
என நம்பப்படுகிறது.
-AFP