வாழ்வியல் trending
உலகிலேயே ஆக மோசமான நிழற்படக் கலைஞரைத் தேடும் IcelandAir... இறுதிப் பட்டியலில் சிங்கப்பூரர்
(படம்:Pixabay)
உலகிலேயே ஆக மோசமாக நிழற்படங்களை எடுப்பவர் யார்?
அந்த விநோதமான போட்டிக்கு ஐஸ்லந்து ஏர் (IcelandAir) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
கிட்டத்தட்ட 130,000 பேர் போட்டியில் கலந்துகொண்டனர்.
இறுதியில் 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
அந்தப் பட்டியலில் 24 வயதுச் சிங்கப்பூரர் மைக்கல் (Mikael) இடம்பெற்றிருக்கிறார்.
செய்தியை அறிந்த திரு மைக்கல் பூரித்துப் போனார்.
கண்ணால் காணும் அழகான காட்சிகள் தாம் எடுக்கும் படங்களில் பிரதிபலிக்கப்படுவதில்லை என்று அவர் நகைச்சுவையாகப் பகிர்ந்தார்.
போட்டியில் வெற்றிபெற்றால் திரு மைக்கலுக்கு சுமார் 63,840 வெள்ளி ரொக்கப் பரிசும் ஐஸ்லந்துக்கு 10 நாள் இலவசமாகப் பயணம் செய்ய வாய்ப்பும் கிடைக்கும்.

போட்டிக்கான காரணம்?
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எதிர்க்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐஸ்லந்து ஏர் சொன்னது.
மனிதர்கள் எடுக்கும் படங்களில் குறைகள் இருந்தாலும் அவை உண்மையைப் பிரதிபலிப்பதால் அதைக் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.