Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைகள் இல்லை...ஆனால் தங்கத்தை வெல்லத் துடிக்கும் இந்திய வீராங்கனை

வாசிப்புநேரம் -

உடலில் குறை இருந்தாலும் மனத்தில் குறைக்கு இடமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஷீதல் தேவி (Sheetal Devi). 

அவர் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் அம்பெய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்லவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கிறார்.

17 வயது ஷீதல் தேவி ஜம்முவைச் (Jammu) சேர்ந்தவர் என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

phocomelia எனும் அரிய நோயால் அவதியுறும் அவருக்குப் பிறப்பிலேயே கைகள் இல்லை. 

"தங்கப் பதக்கத்தை வெல்லவேண்டும். இதுவரை வென்ற பதக்கங்களைப் பார்க்கும்போது மேலும் பல பதக்கங்களை வெல்லவேண்டும் எனும் உற்சாகம் கிடைக்கிறது. இது வெறும் ஆரம்பம் தான்," என்று ஷீதல் தேவி கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்