மருத்துவச் செலவுக்குக் கைபேசியை விற்க நினைத்த தாத்தா - வாங்க மறுத்து, பணம் கொடுத்து உதவிய கடைக்காரர்
வாசிப்புநேரம் -
காலில் புண்...மருத்துவரைப் பார்க்கப் பணம் இல்லை...
இருந்த கைத்தொலைபேசியையும் விற்க எண்ணினார் தாத்தா...
கைத்தொலைபேசியைத் தாத்தாவிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, சிகிச்சைக்குப் பணமும் அளித்தார் கடைக்காரர் ஒருவர்...
அவருடைய செயல் இணையவாசிகளை மனம் நெகிழச் செய்துள்ளது.
சம்பவம் மலேசியாவில் ஜொகூர் மாநிலத்தின் பத்து பஹாட் வட்டாரத்தில் நடந்தது.
கடையின் CCTVயில் பதிவான காணொளி TikTok தளத்தில் பகிரப்பட்டது. காணொளியில் நொண்டிக்கொண்டு நடக்கும் தாத்தா கடைக்குள் செல்கிறார்.
கடைக்காரரிடம் தாத்தா நிலைமையை எடுத்துச் சொல்கிறார்.
நீரிழிவு நோயால் காலில் மோசமான புண் ஏற்பட்டுள்ளது என்றும் உடனடியாக மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
கடைக்காரருக்குக் கைத்தொலைபேசியை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை ...
"உங்களுடைய கைத்தொலைபேசியை விற்காதீர்கள். நானே பணம் கொடுக்கிறேன்," என்று கடைக்காரர் சொல்கிறார்.
தாத்தாவுக்கும் பணத்தை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை...
"எனக்குக் கருணை தேவையில்லை. கைத்தொலைபேசியை எடுத்துகொண்டு அதற்கான பணத்தைத் தாருங்கள்," என்று அவர் சொல்கிறார்.
கடைக்காரர் சொன்னதிலிருந்து பின்வாங்கவில்லை.
அவர் பணத்தை ஏற்றுக்கொள்ளும்படித் தாத்தாவிடம் விடாப்பிடியாகக் கூறுகிறார்.
இறுதியாக தாத்தாவும் அதை ஏற்றுக்கொள்கிறார்.
கடைக்காரரின் செயலை இணையவாசிகள் பலர் மெச்சியதாக New Straits Times ஊடகம் சொன்னது.
"இனம், சமயம் என்று பார்க்காத மனிதாபிமானம் இது"
"ஒரு துளிக் கனிவு...ஒருவருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது,"
என்று இணையவாசிகள் பதிவிட்டனர்.

ஆதாரம் : Others