Skip to main content
"உங்களுடைய பாதையை நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"உங்களுடைய பாதையை நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும்" - உலக மேடையில் சிங்கப்பூர் நடனமணி

வாசிப்புநேரம் -
"உங்களுடைய பாதையை நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும்" - உலக மேடையில் சிங்கப்பூர் நடனமணி

(படம்: Crispian Chan)

நவீன இந்தியப் பாணியில் ஆடும் 28 வயது ஷுருத்தி நாயர் உலக மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறார்.

அவர் ஜப்பானில் நடைபெறும் World Expo கண்காட்சியில் 6 முறை நடனம் படைக்கவிருக்கிறார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழியமைக்கலாம் என்று ஷுருத்தி நம்புகிறார்.

அவருக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எளிதில் கைகூடவில்லை.

அலுவலக வேலையைத் துறந்து 2023இல் கலைப்பாதையில் இறங்கிய ஷுருத்தி சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளார்.

"சில மாதங்களில் வேலை இருக்காது. வருமானமும் இருக்காது. ஆனால் நாள் முழுதும் ஒத்திகை நீடிக்கும். செய்வதற்குப் பலனில்லாததுபோல் இருக்கும்," என்றார் அவர்.

அப்படி சில மாதங்களில் வேலை நிலையாக இருந்தாலும் அதற்கான கட்டணம் தாமதமடையும்.

"வருமானம் நிலையாக இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தும். பல்கலைக்கான கடனைத் தீர்க்கவேண்டும்.. செலவுக்குப் பணம் வேண்டும் என்ற நிலையில் அது பயத்தை அதிகரிக்கும்," என்று சொன்னார் ஷுருத்தி.

 
(படம்: P. Shoban)
World Expo கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டுவதற்குமுன் அவர் அந்த நிலையில்தான் இருந்தார்.

கலைத்துறையில் வாழ்க்கைப் பணி நாடும் ஷுருத்தி செல்லும் பாதை தெரியாமல் இருந்தார்.

"நான் ஒவ்வொரு நாளும் 'எந்தப் பாதையில் செல்வது...செல்லும் பாதை சரிதானா' என்று யோசிக்கிறேன். இந்த வாய்ப்பே என் எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கிறது," என்றார் அவர்.

தம்மைப் போல் பலரும் செல்லும் வாழ்க்கைப் பாதையில் குழப்பத்தைச் சந்திக்கலாம் என்று ஷுருத்தி சொன்னார்.

" உங்களுடைய பாதையை நீங்கள்தான் தெரிவுசெய்யவேண்டும். கடந்த ஓராண்டில் நான் உணர்ந்தது இதுதான்," என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்