வாழ்வியல் trending
சுங்கத்துறையில் ரஜினியின் ‘ஹுக்கும்’ அதிரடி!
Instagram/singaporecustoms
This audio is generated by an AI tool.
தமிழ் நடிகர் ரஜினிகாந்தின் பாடலுடன் சிங்கப்பூர்ச் சுங்கத்துறை வெளியிட்ட காணொளி இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘Hukum Reloaded’ பாடலின் பின்னணி இசை அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
Instagram செயலியில் “Our Director-General in the house 😎🔥” என்ற வாசகத்துடன் காணொளி இருக்கிறது.
ரசிகர்களின் உற்சாகத்தைச் சொல்ல வேண்டுமா?
“தலைவா!", “ஹுக்கும்!", "நெருப்பே!" என்று குதூகலம்.
தலைமை இயக்குநரின் தோற்றத்தைப் பார்த்து “Wow look like a superstar," என்று ஒருவர் பாராட்டியுள்ளார்.
“Hukkum director general ka Hukkum," என்று மற்றொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காணொளியின் பின்னணி இசையும் பலரைக் கவர்ந்துள்ளது.
“Song choice 🎶🔥”
“Damn solid 🔥😂”
“Mind blowing sir ....... Thalaiva on🔥🔥🔥”
இப்படி உற்சாகம் குவிந்துள்ளது.
சிலர் காணொளியை உருவாக்கியவரைப் பாராட்டியுள்ளனர்.
“Admin deserve hike 🙌🔥” என்று ஒருவர் கூறியுள்ளார்.
இன்னொருவர் அடுத்த காணொளிக்கு யோசனை கொடுத்துள்ளார்.
“கறுப்புக் கண்ணாடி அணிந்து முயற்சி செய்யுங்கள், இன்னும் அட்டகாசமாக இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.
“I am deeply connecting with SG customs ❤️”
“Love my Singapore”
என்றும் சிலர் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
காணொளி 21,300க்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளையும் 460க்கும் அதிகமான கருத்துகளையும் பெற்றுள்ளது.
7,700க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு ஒன்று ரஜினிகாந்தின் பாடலைப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர்க் காவல்துறையும் இதேபோன்ற காணொளியை வெளியிட்டது.
தேசிய தின அணிவகுப்புப் பணிகளுக்குத் தயாராகும் காவல்துறை அதிகாரிகளை அந்தக் காணொளி காட்டியது.
அதில் ரஜினியின் ‘கூலி’ படத்தில் இடம்பெற்ற ‘Powerhouse’ பாடல் பயன்படுத்தப்பட்டது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அந்தப் பாடலுக்கும் இசையமைத்திருந்தார்.
காவல்துறையின் காணொளி வெளியான 20 மணி நேரத்திலேயே 4.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.