Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிங்கப்பூரின் முதல் விமான நிலையம்...

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பலரும் அறிந்த ஒன்று... செலெத்தார் (Seletar) விமான நிலையமும் இங்குள்ளது....

காலாங் (Kallang) விமான நிலையம் இருந்தது தெரியுமா?

அதுவே சிங்கப்பூரின் முதல் அனைத்துலக விமான நிலையம்.

1935ஆம் ஆண்டிலிருந்து 1955ஆம் ஆண்டு வரை அது செயல்பட்டது.

உலகின் தலைசிறந்த விமான நிலையமாகவும் அப்போது அது பாராட்டப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டித் தனியாகப் பறந்த முதல் பெண் விமானியான அமெலியா ஏர்ஹார்ட் (Amelia Earhart) கூட 1938ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, காலாங் விமான நிலையத்தை மெச்சினார்!

1940களில் விமானப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

விமான நிலையத்தில் இருந்த வசதிகள் போதுமானவையாக இல்லை. 

அதனால் பாய லேபார் அனைத்துலக விமான நிலையத்தைக் (Paya Lebar International Airport) கட்டுவதற்கான திட்டங்கள் 1951ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.


இன்று காலாங் விமான நிலையம் செயல்படவில்லை. ஆயினும் பாதுகாக்கப்பட்டுள்ள அதன் கட்டடமும் அமைப்புகளும் சிங்கப்பூரின் விமானப்போக்குவரத்துத் துறை எவ்வாறு சாதாரணமாகத் தொடங்கியது என்பதை நினைவுகூர்கின்றன. 

அனைத்துலக விமானப் போக்குவரத்தில் சிங்கப்பூரின் பெயரை நிலைநாட்டுவதில் அதன் பங்கு கணிசமானது. 

காலாங் விமான நிலையம் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்...

-1935ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி புயலில் சிக்கிக்கொண்ட விமானம் ஒன்று முதன்முறையாக அவசரமாய்த் தரையிறங்க நேரிட்டது. 

- 2 வருடங்களுக்குப் பிறகு, 1937ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி காலாங் விமான நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

- விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுற 5 ஆண்டுகள் ஆயின.

- 2008ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலாங் விமான நிலையத்தை நகரச் சீரமைப்பு ஆணையம் (Urban Redevelopment Authority) மரபுடைமைத் தலமாக அறிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்