F1 கார்ப்பந்தயத் தடத்தில் ராட்சதப் பல்லி!

X/Formula 1
சிங்கப்பூர் Grand Prix பந்தயத் தடத்தில் F1 கார்களின் பயிற்சிக்கு இடையூறாய் அமைந்தது அங்குச் சென்ற ராட்சதப் பல்லி ஒன்று!
நேற்று (21 செப்டம்பர்) இறுதிப் பயிற்சியின்போது திடீரென்று ஒரு பெரிய பல்லி தடத்திற்குள் நுழைந்தது.
அதைப் பிடிக்க அதிகாரிகள் விரைந்தனர்.
சமூக ஊடகத்தில் வெளியான காணொளியில் இருவர் ராட்சதப் பல்லிக்குப் பின் ஓடுவதைக் காணமுடிகிறது.
அருகில் இருந்த ஓட்டுநர்கள் சிலர் சம்பவத்தைக் கண்டு சிரித்தனர்.
நல்ல வேளையாக அப்போது தடத்தில் நிறைய கார்கள் இல்லை.
Aston Martin கார்களை ஓட்டும் பெர்னாண்டோ அலோன்சோவும் (Fernando Alonso) லேன்ஸ் ஸ்ட்ரோலும் (Lance Stroll) அங்கு இருந்தனர்.
ராட்சதப் பல்லியைத் தவிர்க்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
லாவகமாய் அதைத் தாண்டிச் சென்றதாக ஓட்டுநர்கள் கூறினர்.