Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்துக்கு அருகில் திறக்கப்படவிருக்கும் 'சிங்கப்பூர் உணவங்காடி நிலையம்'

வாசிப்புநேரம் -

நியூயார்க் நகரின் பிரபல டைம்ஸ் சதுக்கத்துக்கு அருகே முதன்முறையாக சிங்கப்பூர் உணவங்காடி நிலையம் திறக்கப்படவிருக்கிறது. 

Urban Hawker என்றழைக்கப்படும் அதில் பிரபல சிங்கப்பூர் உணவங்காடிக் கடைகள் அமைந்திருக்கும். 

நிலையம் நாளை பொதுமக்களுக்குத் திறக்கப்படும். பின்னர் இம்மாதம் 28ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும். 

சிங்கப்பூரின் Makansutra நிறுவனரும்  உணவு நிபுணருமான சீத்தோ (Seetoh) உணவங்காடியை வடிவமைத்திருக்கிறார். 

200 பேர் அமர்ந்து உண்ணக்கூடிய நிலையம் சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 

"நியூயார்க்கில் ஏதாவது நடந்தால் அது உலகின் பார்வையை ஈர்க்கும். நமது உணவங்காடிக்காரர்களை உலகின் பார்வைக்குக் கொண்டுவருவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார் சீத்தோ.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்