வாழ்வியல் trending
Air purifiers - இதைத் தெரிந்துகொண்டு வாங்குங்கள்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் புகைமூட்டம் தொடர்வதால், காற்றைத் தூய்மைப்படுத்தும் air purifiers சாதனங்களின் தேவை அதிகரித்து வருகிறது.
Air purifiers சாதனங்களின் விற்பனை 76 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக கெயின் சிட்டி (Gain City) நிறுவனம் 'செய்தி'யிடம் தெரிவித்தது.
குறிப்பாக இம்மாதம் ஆக்டோபர் ஒன்பதாம் தேதி அதன் விற்பனை உச்சத்தை எட்டியதாக அது சொன்னது.
Air purifiers சாதனங்களை வாங்குவதற்கு முன் சில முக்கிய அம்சங்களை மனத்தில் வைத்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற அமைப்பு நினைவூட்டுகிறது.
1) நம் அறையின் அளவிற்கு ஏற்ப சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
Clean Air Delivery Rate அதாவது காற்றைத் தூய்மைப்படுத்தும் சாதனத்தின் வேகத்தைச் சரிபார்க்கவேண்டும்.
வேகம் அதிகமாக இருந்தால், அறைக்குச் சுத்தமான காற்றை வழங்கும் திறனும் அதிகமாக இருக்கும்.
அதனால் அறையின் அளவிற்கு ஏற்ப சாதனத்தின் வேகத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

2) சரியான காற்று வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
High-efficiency particulate air (HEPA) எனும் திறன்மிக்க வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நுண்ணிய துகள்களைஅகற்றுவதற்கு HEPA போன்ற அதிக செயல்திறன் கொண்ட வடிகட்டிகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
அது தவிர நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற சில வழக்கங்களையும் அமைப்பு பட்டியலிட்டது.
காற்றோட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்
முடிந்தவரை சன்னல்கள், கதவுகளைத் திறந்து வைத்து, வெளிக்காற்று உள்ளே வர வழிவிட வேண்டும்.
மின்விசிறிகளை சன்னலை நோக்கி வைத்து, அறைக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றலாம். இதனால் காற்றோட்டம் அதிகரிக்கும்.
காற்றின் தரம் மோசமாக இருக்கும் வேளையில், மின்விசிறிகளை ஓடவிடுவது நல்லது.

Air purifiers சாதனங்கள் மேற்பரப்புகளைச் சுத்தம் செய்வதில்லை.
அதனால் தரைகள், சுவர்கள் போன்ற மேற்பரப்புகளைத் தொடர்ந்து சுத்தம் செய்து கிருமிநாசினி பயன்படுத்துவது அவசியம்.
காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களின் சன்னல்களில் மின்விசிறிகளைப் பொருத்தலாம்.
காற்று உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் சரியான பாதையை ஏற்படுத்துவது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும்.

ஆதாரம் : Mediacorp Seithi