சிங்கப்பூர் இரவு விழாவில் பறவை மனிதர்கள்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Mak Jia Kee
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் மிகப் பெரிய இரவு விழா இன்று தொடங்குகிறது.
பிராஸ் பாஸா- புகிஸ் வட்டாரம் முழுதும் விழா கோலத்தில் மின்னும்.
"Myths and Legends" அதாவது தொன்மங்களும் புராணங்களும் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
அதற்கு ஏற்ப சிங்கப்பூரின் புராணக் கதைகள், நம்பிக்கைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு இருளைத் துளைக்கும் ஒளி விருந்து நடைபெறும்.

The Cathay கட்டடம், சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம் உள்ளிட்ட இடங்களில் கண்கவர் காட்சிகள் இடம்பெறும்.
அதுமட்டுமா?
வரலாற்றுப் பதிவுக்கு முந்தைய காலக்கட்ட உணர்வைக் கொண்டுவர...
டைனசார்கள் நடமாடும் உலகில் இருப்பது போன்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி தரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உயரமான கம்புகளில் நடக்கும் கலைஞர்கள், ஒளிரும் பறவை உருவங்களில் பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
1800ஆம் ஆண்டு காலக்கட்டத்திலிருந்த புகிஸ் கடலோடிகளின் சாகசங்களை வெளிப்படுத்தும் வகையில் கலைப் படைப்புகள்...
தீப்பந்தங்களைச் சுழற்றிப் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்கள்...

என இரவு 7.30 மணியிலிருந்து 11 மணி வரை கண்களுக்கு விருந்தளிக்கும் பல நிகழ்ச்சிகள் உள்ளன.
விழா இன்று முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நடைபெறும்.

ஆதாரம் : CNA