Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

நியூயார்க் Times Square விளம்பரப் பலகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியப் பாடகி - "கனவு மெய்ப்பட்டது!"

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் நியூயார்க் Times Square என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கண்கவர் விளம்பரப் பலகைகள்தான்.

அவற்றில் ஒன்றில் முதன்முறையாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியப் பாடகி ஷஸ்ஸா (Shazza) இடம்பெற்றுள்ளார்.

அந்த அனுபவம் ஏதோ கனவு போன்று இருந்ததாக அவர் 'செய்தி'யிடம் தெரிவித்திருந்தார்.
 
(படம்: : Cross Ratio Entertainment)



பெண் இசைக் கலைஞர்களுக்குக் கைகொடுக்கும் Spotify நிறுவனத்தின் EQUAL திட்டத்தால் ஷஸ்ஸாவின் கனவு மெய்யானது.

அந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண் பாடகி தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

சென்ற மாதம் 22 வயது ஷஸ்ஸா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(படம்: Shafeeq Shariff)



11 வயதிலிருந்து இசையமைத்துக்கொண்டிருக்கும் இவருக்குப் பாடுவதிலும் மிகுந்த ஆர்வம்.

வரிகளை எழுதுவது...

அவற்றை ஒரு பாடலாக்குவது...

அதில் இருக்கும் புத்தாக்கம் தமக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் சொன்னார்.

தம்மை விளம்பரப் பலகையில் பார்த்தபோது, தாம் ஏதோ ஒன்றைச் சரியாகச் செய்துவருகிறோம் என்று உணர்ந்ததாக ஷஸ்ஸா கூறினார்.

அது தமக்கு ஒரு மறக்கமுடியாது அனுபவம் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் கலையைத் தொழிலாக்கிக்கொள்வதில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கக்கூடும் என்றார் அவர்.

(படம்: Shafeeq Shariff)

இருப்பினும் நமது கலையில் நாம் பெருமிதம் கொள்ளவேண்டும் என்றார் ஷஸ்ஸா.

எதற்காகச் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தால், கலைப் பயணமும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்