Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அடித்தது அதிர்ஷ்டம்....10,000 டாலர் பரிசுப் பணம் பெற்ற சிங்கப்பூரர்

வாசிப்புநேரம் -
அடித்தது அதிர்ஷ்டம்....10,000 டாலர் பரிசுப் பணம் பெற்ற சிங்கப்பூரர்

mrbeast, meyyen_/Instagram

அமெரிக்க YouTube பிரபலம் MrBeastஇடமிருந்து ஆளுக்கு 10,000 டாலர் (13,280 வெள்ளி) பரிசுப் பணம் பெற்ற 10 அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் ஷெரில் டான் (Sheryl Tan) எனும் சிங்கப்பூரர்.

கலைஞரும் வடிவமைப்பாளருமான 32 வயது ஷெரிலைப் பலரும் வாழ்த்திவருகின்றனர்.

தாம் வெற்றிபெற்ற தகவலை நேற்று (மே 11) அதிகாலை 3 மணிக்கு MrBeast குறுஞ்செய்தியில் அனுப்பியதாக ஷெரில்  TODAYயிடம் கூறினார்.

பரிசுத் தொகையை வைத்துக் கலைத்தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல ஷெரில் திட்டமிட்டுள்ளார்.

யார் இந்த MrBeast? 

ஜிம்மி டோனல்ட்சன் (Jimmy Donaldson) எனும் இயற்பெயரைக் கொண்ட MrBeast ஓர் அமெரிக்கர். 

11 வயதில் YouTubeஐத் தொடங்கிய அவரை 151 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர்.

அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பது, பார்வை இழந்தவர்கள் ஆயிரம் பேருக்கு அறுவைச் சிகிச்சைக்கு உதவியது என MrBeast பல உதவிகள் செய்துள்ளார்.

என்ன போட்டி?

பங்கேற்பாளர்கள் MrBeastஇன் Instagram பதிவைத் தங்களின் "Stories"இல் பதிவேற்றி, அவரது கருத்துகள் பகுதியில் மற்றொருவரின் பெயரை "tag" செய்யவேண்டும். MrBeastஇன் Instagramஐயும் அவர்கள் பின்தொடரவேண்டும் என்பதுதான் போட்டி.

கடந்த மே 7ஆம் தேதி 25ஆவதுப் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இந்தப் போட்டியை நடத்தினார். 

போட்டியில் 21 மில்லியன் பேர் பங்கேற்றனர். 

தொடக்கத்தில் 5 வெற்றியாளர்கள்  தெரிவுசெய்யப்படுவார்கள் என்றுதான் MrBeast அறிவித்தார். ஆனால் அந்த எண்ணிக்கையை அவர் பின்னர் 10க்கு அதிகரித்தார். 
 

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்