"குளிக்கும்போது பாடினால் தன்னம்பிக்கை கூடும்!"
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
குளிக்கும்போது பாட்டுப் பாடினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும், உற்சாகம் பிறக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளியலறையில் பாடும்போது நாம் விடுதலை பெற்றதைப்போல் உணரலாம் என்று சொல்லப்படுகிறது.
பாட்டுப் பாடுவதிலும் இசை கேட்பதிலும் நிறைய நன்மைகள் இருப்பதாகவும் அது நன்றாகச் சுவாசிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளையில் தண்ணீர் நம்மை அமைதிப்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பொதுவாகவே இசையால் நாம் பல நன்மைகளைப் பெறலாம்.
பாடுவதாலும் இசைக்கருவிகளை வாசிப்பதாலும் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகிறது.
இசை உடற்பயிற்சியின்போது உத்வேகத்தைக் கொடுக்கும்; துவண்டுபோகும்போது தூண்டுதலாக அமையும்.
எனவே கூடுமானவரை அன்றாட வாழ்க்கையில் இசையோடு இணைந்திருக்கவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளியலறையில் பாடுவது அதற்கு முதல் படியாக அமையலாம்.

ஆதாரம் : South China Morning Post