Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒரு சிகரெட் புகைத்தால் ஆயுளில் 20 நிமிடங்கள் குறையும்: ஆய்வு

வாசிப்புநேரம் -
சிகரெட் ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதைப் பலரும் அறியாமல் இருப்பதாகக் கூறுகின்றனர் University College London ஆய்வாளர்கள்.

அதன் ஆய்வுத் தகவலை அவர்கள் வெளியிட்டனர்.

🚬 ஒரு சிகரெட் சராசரியாக ஒருவரின் ஆயுளில் 20 நிமிடங்களைக் குறைக்கும்.

🚬 ஆக ஒரு பெட்டியிலிருக்கும் 20 சிகரெட் துண்டுகளைப் புகைத்தால் ஒருவரின் ஆயுளில் 7 மணிநேரம் குறையும்.

சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் குறைப்பதால் ஏற்படும் நன்மைகளையும் ஆய்வு சுட்டியது.

ஒரு நாளில் 10 சிகரெட்டைப் புகைக்கும் ஒருவர்.....

🚭ஜனவரி முதல் தேதி அப்பழக்கத்தைக் கைவிட்டால் ஜனவரி 8ஆம் தேதிக்குள் ஒருநாள் ஆயுளைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

🚭பிப்ரவரி 5ஆம் தேதி வரை அவ்வாறு செய்தால் ஒரு வார ஆயுளைக் காப்பாற்றலாம்.

🚭புத்தாண்டு தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை அது நீடித்தால் ஒரு மாதக் கால ஆயுளைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

🚭ஆண்டிறுதியில் ஆயுளில் 50 நாள்கள் குறைவதைத் தடுக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான சிகரெட் புகைக்கும் பழக்கும் தவிர்க்கப்படக்கூடிய ஒன்றே என ஆய்வு கூறுகிறது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்