Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒன்றையர் தினம் ஏன் நவம்பர் 11-ஆம் தேதி?

ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் தேதி ஒற்றையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அது ஏன் என்று நம்மில் பலர் யோசித்திருப்போம்.

வாசிப்புநேரம் -
ஒன்றையர் தினம் ஏன் நவம்பர் 11-ஆம் தேதி?

படம்: Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் தேதி ஒற்றையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அது ஏன் என்று நம்மில் பலர் யோசித்திருப்போம்.

1990களில் சீனாவில் உள்ள நன்ஜியாங் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் ஒற்றையர் தினக் கொண்டாட்டம் தொடங்கியது.

4 கல்லூரி மாணவர்கள் தாங்கள் ஒற்றையராக இருப்பத்தைக் கொண்டாட எண்ணினர்.தேதியில் நான்கு முறை எண் 'ஒன்று' வருவதால் (11/11), அது ஒற்றையரைக் குறிப்பதாகக் கருதப்பட்டது.

ஆரம்பத்தில் Bachelor’s Day என்று அது அழைக்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அந்தச் சிந்தனை பரவியது. நாளடைவில் சீனாவின் பண்பாட்டில் அது ஒன்றிணைந்து. ஆண்களும் பெண்களும் சந்தித்துப் பேசி, பரிசுகள் பரிமாறி அதைக் கொண்டாடத் தொடங்கினர். இதனால், நாளடைவில் அன்றைய தினம், பொருள்களை வாங்கும் போக்கும் சீனாவில் அதிகரித்தது.

சீனாவில் மட்டுமே பிரபலமாக இருந்த அதை உலகளவில் எடுத்துச் சென்றது, பன்னாட்டு இணைய வர்த்தக நிறுவனமான Alibaba.

Alibaba நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான, டேனியல் ஜாங் 2009 இல் ஒற்றையர் தினத்தைப் பிரபலப்படுத்தினார்.

அன்றைய தினம், ஏராளமான பொருள்கள் சலுகை விலையில் விற்கப்படுகின்றன.

அமெரிக்காவின் பிரபல "Black Friday" சலுகை விற்பனையைவிட சுமார் 5 மடங்கு அதிகமான விற்பனை, ஒற்றையர் தினத்தில் இடம்பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்