Skip to main content
'நிமிர்ந்து நில்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

'நிமிர்ந்து நில்' - முதுகு வலியைத் தடுக்க அது போதுமானதா?

வாசிப்புநேரம் -
'நிமிர்ந்து நில்' -  முதுகு வலியைத் தடுக்க அது போதுமானதா?

unsplash

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 28 Aug 2025 10:16AM புதுப்பிப்பு : 28 Aug 2025 11:18AM
நிமிர்ந்து நிற்கவேண்டும்...முதுகு நிமிர்ந்தவாறு உட்காரவேண்டும் என்ற ஆலோசனையை நம் பெற்றோரும் மூத்தோரும் வழக்கமாக வழங்குவார்கள்.

'வருங்காலத்தில் முதுகு வலியைத் தவிர்க்க அது அவசியம்' என்ற விளக்கமும் அவர்கள் அளிப்பார்கள்.

ஆனால் நிமிர்ந்திருப்பதால் மட்டும் முதுகு வலியைத் தவிர்க்க முடியாது. மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தினால் முதுகு வலுவடையலாம். அவற்றை டாக்டர் சாண்ட் வான் துல்லெக்கென் (Xand van Tulleken) BBC ஊடகத்திடம் பகிர்ந்தார்.

1. ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காரவேண்டாம்

ஒரே இடத்திலேயே வெகு நேரம் உட்கார்ந்திருப்பது முதுகைப் பாதிக்கக்கூடும். அவ்வப்போது நடப்பது, அல்லது சில தசை நீட்டும் பயிற்சிகளைச் (Stretching) செய்வது, முதுகை வலுப்படுத்தும்.

2. உடற்பயிற்சி

உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று தீவிரமாகப் பயிற்சி செய்வது அவசியமில்லை. சில எளிதான உடற்பயிற்சிகளைச் செய்தால் முதுகு பலனடையும். உதாரணத்துக்கு, கைகளை மேலே தூக்கித் தலையை அங்கும் இங்கும் அசைப்பதும் கூட உதவியாக இருக்கலாம்.

3. மன உளைச்சலைச் குறைக்கவேண்டும்

மனநிலையைத் திடமாக்கிக்கொண்டால் ஆரோக்கியமும் மேம்படலாம்.

மனவுளைச்சலால் பாதிக்கப்படுவோர் பொதுவாக நிமிர்ந்து உட்காராமல் குனிந்து உட்காரும் போக்கைக் கொண்டிருப்பார்கள்.

அவ்வாறு செய்தால் முதுகு வலி மோசமாகலாம் என்று டாக்டர் வான் துல்லெக்கென் கூறினார்.

சில முறை மனவுளைச்சலைக் குறைத்துக்கொண்டாலே முதுகு வலியைத் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

மூன்று உத்திகளும் முதுகை வலுப்படுத்த உதவலாம்.

எனினும் முதுகு வலியால் வெகு நாளாகப் பாதிக்கப்படுவோர் மருத்துவரை அணுகவேண்டும் என்று டாக்டர் வான் துல்லெக்கென் வலியுறுத்தினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்