வாழ்வியல் செய்தியில் மட்டும்
சருமத்தின் மர்மம்: DIY சரும சிகிச்சைகள் - நன்மையா? தீமையா?

(படம்: Pixabay)
"நீங்களே செய்யலாம்"...
"சமையலறையில் உள்ள பொருள்களைக் கொண்டு சருமப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்"...
என்ற வாசகத்தைச் சமூகத் தளங்களில் உள்ள காணொளிகளில் பலரும் கேட்டிருக்கலாம்.
அவர்கள் கூறும் தீர்வுகளைச் செய்தும் பார்த்திருக்கலாம்.
ஆனால், அவை சருமப் பிரச்சினையைப் போக்குமா? அல்லது தீவிரமடையச் செய்யுமா?
வீட்டில் செய்யக்கூடிய சிகிச்சைகளால் நன்மையா? தீமையா?
இதற்கு முன், எந்தவித சருமப் பிரச்சினைகளும் இல்லாதவர்கள், சிகிச்சையில் சேர்க்கப்படும் பொருள்களைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பூண்டு, இஞ்சி, கொதிக்கும் நீர், மருத்துவ எண்ணெய்-ஆகியவற்றைச் சருமத்தில் பயன்படுத்திய சிலரது சருமம் கடுமையாய் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவ்வாறு வீட்டில் செய்யப்பட்ட பொருள்களை, முதலில் சிறிதளவு முகத்திலோ கழுத்துப் பகுதியிலோ பயன்படுத்திப் பார்க்கலாம் (patch test).
அதனால் சருமத்திற்கு ஏதேனும் பாதிப்பு நேர்கிறதா என்பதைச் சோதிக்க அது உதவும்.