Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

சருமத்தின் மர்மம்: 'இயற்கையான' அல்லது 'ரசாயனமற்ற' சருமப் பொருள்களில் கூடுதல் நன்மையுள்ளதா?

வாசிப்புநேரம் -

ரசாயனப் பொருள்கள் கலந்த சருமப் பராமரிப்புப் பொருள்களைவிட, ரசாயனக் கலப்பற்ற, இயற்கையான பொருள்களிலேயே அதிக நன்மை உண்டு என்பது பரவலான நம்பிக்கை.

ஆனால், அதில் உண்மையில்லை என்கிறார் தோல் மருத்துவர் உமா அழகப்பன்.

தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தினாலுமே, சிலரது சருமம் அவற்றை ஏற்றுக்கொள்ளாது என்று டாக்டர் உமா குறிப்பிட்டார்.

தேனீக்களிடமிருந்து எடுக்கப்பட்ட Propolis, ஆடுகளிடமிருந்து எடுக்கப்பட்ட Lanolin ஆகியவை சிலருக்குச் சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்று அவர் விளக்கினார்.

உண்மையிலேயே ரசாயனமற்ற சருமப் பராமரிப்புப் பொருள்கள் உண்டா?

இயற்கையான பொருள்களைக் கொண்டு சருமப் பராமரிப்புப் பொருள்களை உருவாக்க, சில ரசாயனங்களைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.

அந்தச் சருமப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் ரசாயனமோ மற்ற மூலப்பொருள்களின் துர்நாற்றத்தை மறைக்கும் நறுமண ரசாயனமோ அதில் சேர்க்கப்படலாம்.

அதனால், ரசாயனக் கலப்பற்ற சருமப் பொருள்கள் முற்றிலும் நன்மையளிப்பவையும் அல்ல.

ரசாயனக் கலப்புள்ள பொருள்கள் சருமத்திற்குக் கெடுதியானவையும் அல்ல.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்