Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

இரவில் விழித்திருந்து பகலில் தூங்குவது... இது ஆரோக்கியமான போக்கா?

வாசிப்புநேரம் -
சிலர் இரவு முழுவதும் வேலை செய்துவிட்டு பகலில் தூங்குவது உண்டு.

இன்னும் சிலர் காற்பந்து ஆட்டங்கள் பார்ப்பது, திறன்பேசிகளைப் பயன்படுத்துவது என இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு பகலில் தூங்குவது உண்டு.

"மனிதர்களுக்குத் தேவையானது சில மணி நேரத் தூக்கம் தானே... அதை இரவில் தூங்கினால் என்ன? பகலில் தூங்கினால் என்ன?"

என்பது அவர்களின் கருத்து.

ஆனால் இரவில் தூங்குவதும் பகலில் தூங்குவதும் ஒன்றாகாது என்கிறார் மருத்துவர் டாக்டர் பைசல்.

"நமது இயற்கையான தூங்கும் போக்கு இரவில் தான். அதனால் பகலில் தூங்குவதைவிட இரவுத் தூக்கமே தரமானது."

பகலில் தூங்குவதால் விளைவுகள் உண்டா?

"பகல் நேரத்தில் சிறிது நேரம் தூங்குவது புத்துணர்ச்சியைத் தரலாம்."

"ஆனால் இரவுத் தூக்கத்திற்குப் பதிலாகப் பகலில் தூங்குவது நமது இயற்கையான தூங்கும் போக்கிற்கு இடையூறு அளிக்கக்கூடியது."

"அதனால் ரத்த அழுத்தம், சுரப்பிகள் ஆகியவை பாதிக்கப்படலாம். உடல் பருமன், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயமும் அதிகம்."

என்று டாக்டர் பைசல் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்