எச்சரிக்கும் கடிகாரம் - புகை பிடித்தலை நிறுத்த உதவுமா?
அறிவார்ந்த கடிகாரம் மூலம் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒருவர் சிகரெட்டைப் பிடிக்கும் போது அவரின் கை அசைவை அடையாளம் காணும் மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிகரெட்டைப் பிடிப்பது தெரிந்தவுடன் அறிவார்ந்த கடிகாரம் எச்சரிக்கையை எழுப்பும்.
அந்தக் கருவியில் இருக்கும் செயலி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பும். குறுஞ்செய்திகளைப் புகைபிடிப்பவர்களும் முன்பு புகைபிடித்தவர்களும் உருவாக்கினர்.
புகைபிடிப்பதை நிறுத்த ஆதரவு வழங்கப்படும்.
"புகைபிடிப்பதை நிறுத்தினால் சுலபமாக மூச்சு விடலாம்...புகைபிடித்தலை நிறுத்துவது நல்லது" - குறுஞ்செய்திகளில் இதுவும் ஒன்று.