பகலில் காப்பி அருந்த கேளிக்கைக் கூடம்
வாசிப்புநேரம் -
படம்: Roslan RAHMAN / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இரவில் கேளிக்கை விடுதியா? மதுபானமா?
வேண்டவே வேண்டாம்...
பகலில் காப்பியும் நல்ல இசையும் போதும் என்கின்றனர் சில இளையர்கள்.
டக்ஸ்டன் (Duxton) வட்டாரத்தில் மதிய நேரத்தில் செயல்படும் Beans and Beats கேளிக்கைக் கூடம் இளையர்களிடையே பிரபலமாகி வருகிறது.
அங்குக் காப்பி மட்டுமே விற்கப்படுகிறது.
இளையர்கள் காப்பியை அருந்திக்கொண்டே பாடல்களுக்கு ஆடுகின்றனர்.
சுறுசுறுப்பாக நடனமாடுவதற்குக் காப்பி ஒன்றே போதும் என்கிறார் Beans and Beats-இன் துணை நிறுவனர் 21 வயது ஏடன் லாவ் (Aden Low).
மதுபானத்திற்குப் பதில் காப்பியை நாடுவதால் பணம் மிச்சப்படுவதாக அங்குச் செல்லும் இளையர்கள் சிலர் கூறினர்.
கடையில் மதுபானம் இல்லாததால் பாதுகாப்பு அதிகமாக இருப்பதை உணர்வதாகவும் அவர்கள் பகிர்ந்தனர்.
1997ஆம் ஆண்டுக்கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்த Gen Z இளையர்களிடையே மதுபானம் அருந்தும் போக்கு குறைந்திருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
மதுப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல, மனநலப் பிரச்சினைகள் குறித்து இன்றைய இளையர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.