Skip to main content
"ஒருவர் மனந்தளர்ந்து கைவிடும்வரை தோல்விக்கு இடமில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"ஒருவர் மனந்தளர்ந்து கைவிடும்வரை தோல்விக்கு இடமில்லை" - மனதளவில் ஊனமில்லை என்று நிரூபித்த இளையர்

வாசிப்புநேரம் -
உடலில் ஊனம் இருந்தால் என்ன? மனதளவில் ஊனமில்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தென் கொரியாவைச் சேர்ந்த ஜாங் இக் சூன் (Jang Ik-sun).

37 வயது ஜாங் வாழ்வில் பல சவால்களையும் போராட்டங்களையும் கடந்து 2024ஆம் ஆண்டில் முதுநிலைப்பட்டம் பெற்றதாக The Korea Herald குறிப்பிட்டது.

பக்கவாதம், Muscular Dystrophy நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஜாங்.

இளம் வயதிலிருந்தே அவரால் எழுந்து நடக்கவோ நிற்கவோ இயலாது என்று The Korea Herald தெரிவித்தது.

ஆனால் ஜாங் மனம் தளரவில்லை...படிப்பை ஒருபோதும் கைவிடவில்லை. அதில் முழுக் கவனம் செலுத்தினார்.

முதுநிலைப்பட்டத்திற்காக ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டியிருந்தது.

ஜாங்கினால் எழுத இயலாது.

கண் அசைவுகளை எழுத்துகளாக உருமாற்றும் தொழில்நுட்பத்தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டுக் கண்சிமிட்டுக்கொண்டே ஆய்வுக்கட்டுரையை எழுதிமுடித்தார் ஜாங்.

அதுபோக ஜாங் தம்மைப் போன்று உடற்குறையுடையவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். அவர்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் YouTubeஇல் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார் ஜாங்.

ஒருவர் மனந்தளர்ந்து கைவிடும்வரை தோல்விக்கு இடமில்லை என்று கூறிய ஜாங்...அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : Others/Hindustan Times

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்