Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சோயா மொச்சை உணவு வகைகள் இரைப்பைப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு

வாசிப்புநேரம் -

சோயாவிழுது (Soybean paste), தவ்வு (tofu) முதலிய சோயா மொச்சை உணவு வகைகள் இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும் எனப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

சோல் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr காங் டாய் ஹீ (Dr Kang Dae-hee), Dr ஷின் வூ யோங் (Dr Shin Woo-kyoung) ஆகிய இரண்டு பேராசிரியர்கள் அந்த ஆய்வை நடத்தினர். 

ஆய்வின் முடிவில், சோயா அல்லது மொச்சை (bean) வகை உணவை அதிகம் உண்பதன் வாயிலாக வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சராசரியாக 9 ஆண்டுகளுக்கு அந்த ஆய்வு நடத்தப்பட்டது. 139,267 பேர் அதில் பங்கேற்றனர். 
இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போர், அது இல்லாதவர்கள் என இரு தரப்பினரும் அதில் கலந்துகொண்டனர்,

சோயா மொச்சைகள், அவை சார்ந்த உணவு வகைகள், தவ்வு முதலியவற்றை உண்பதால் அவர்களுக்கு  ஏற்படும் தாக்கம் குறித்து மிக  அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.   

ஆய்வில், அவ்வளவாகத் தவ்வு உண்ணாத ஆடவர்களைக் காட்டிலும் வாரத்திற்குக் குறைந்தது இருமுறை தவ்வு உண்ட ஆடவர்களுக்கு வயிற்றுப்புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 37 விழுக்காடு குறைவாக இருந்தது தெரிய வந்தது.

ஆய்வின் முடிவுகள் European Journal of Nutrition சஞ்சிகையிலும் வெளியிடப்பட்டன.

தென் கொரியாவில் சோயாவிழுது, உணவில் சேர்க்கப்படும் சுவையூட்டியாகவும் திகழ்கின்றது. சமைக்கப்பட்ட சோயா மொச்சைகளைப் பல மாதங்களுக்கு உப்பு நீரில் புளிக்கவைத்து அந்த விழுது தயாரிக்கப்படுகிறது. 

 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்