Skip to main content
சக்கர நாற்காலியில் தவித்தவருக்கு உதவிய சிலந்தி மனிதன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

சக்கர நாற்காலியில் தவித்தவருக்கு உதவிய சிலந்தி மனிதன்

வாசிப்புநேரம் -
சக்கர நாற்காலியில் தவித்தவருக்கு உதவிய சிலந்தி மனிதன்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

திரைப்படங்களில் சிலந்தி மனிதன் மக்களைக் காப்பாற்றுவார்.

ஆனால் அமெரிக்காவில் ஒருவர் உண்மையிலேயே அந்தக் கதாநாயகனாக மாறிய சம்பவம் இணையத்தில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் (Arkansas) மாநிலத்தில் உள்ள ஜோன்ஸ்பரோ (Jonesboro) நகரில் அந்தச் சம்பவம் நடந்தது.

சக்கர நாற்காலியில் சென்ற ஒருவர் சாலையின் 6 தடங்களைக் கடக்க முடியாமல் தவித்தார்.

அப்போது, சிவப்பு வாகனத்தில் போக்குவரத்து சமிக்ஞைக்காகக் காத்திருந்த 'சிலந்தி மனிதன்' திடீரென சாலையில் குதித்தார்.

அவர் 20 வயது கிறிஸ்டோஃபர் ஹெல்லன்தால் (Christopher Hellenthal).

வேலையிடத்தில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சிலந்தி மனிதன் உடையிலேயே அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சாலையைக் கடக்கப் போராடியவரைப் பார்த்ததும், "நான் இருக்கிறேன்... கவலை வேண்டாம்" என்று கூறியபடியே அவரிடம் ஓடிச் சென்றார்.

சில நொடிகளிலேயே சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க உதவினார்.

அதன்பிறகே போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியது.

வாகனங்கள் நகரத் தொடங்குவதற்கு முன்பாகவே இருவரும் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்துவிட்டனர்.

இந்தக் காட்சி அங்கிருந்த பாதுகாப்புக் கேமராவில் பதிவானது.

அதை ஜோன்ஸ்பரோ காவல்துறையினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

சிறிது நேரத்தில் பல்லாயிரம் பேர் அந்தக் காணொளியைப் பார்த்துப் பகிர்ந்துள்ளனர்.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்