காதலுக்கு வயதில்லை... 102 வயதிலும் 85 வயதிலும் காதல் மலர்ந்தது
வாசிப்புநேரம் -
(படம்: Pixabay)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் 102 வயது ஆடவரும் 85 வயது மாதும் காதலர்களாக இருக்கின்றனர்.
வூஹான் நகரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் திரு சியாங்கும் திருவாட்டி சாங்கும் சந்தித்தனர்.
திரு சியாங் எழுத்துக்கலை, ஓவியக்கலை ஆகியவற்றின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் இசை வாத்தியங்களையும் வாசிப்பார்.
திருவாட்டி சாங் பூ வேலைப்பாடுகளில் திறமைசாலி.
இருவரும் முதலில் சந்தித்தபோது அவர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருந்த திறமைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர். அதிலிருந்து நட்பு வளர்ந்தது. அது பின்னர் காதலாக மாறியது.
அவர்களுடைய உறவைக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா என்ற அச்சம் இருவருக்கும் இருந்தது.
ஆனால் அவர்களுடைய குடும்பத்தினர் முழுமனத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.
"மூத்தோர் மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்," என்று திருவாட்டி சாங்கின் மகன் கூறினார்.
வயதானாலும் அவர்களுக்கு இருக்கும் உறவினால் இருவரும் ஆனந்தமாகவும் சீரான உடல்நலத்துடனும் இருக்கிறார்கள் என்று சொல்லி முதியோர் இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அகம் மகிழ்ந்தனர்.

ஆதாரம் : 8 Days