சுவருக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த Renoir ஓவியங்கள் மீட்பு
வாசிப்புநேரம் -
படம்: Thibaud MORITZ / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடப்பட்ட பிரபல பிரெஞ்சு ஓவியர் பியர்-அகுஸ்ட் ரெனுவாரின் (Pierre-Auguste Renoir) இரண்டு ஓவியங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்குரிய ஒருவரின் வீட்டில் காவல்துறையினர் இரண்டாவது முறையாகச் சோதனை நடத்தியபோது சுவருக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
“Portrait of Madame Colonna Romano”, “Young Woman at the Well” ஆகிய அந்த இரண்டு ஓவியங்களின் மொத்த மதிப்பு 4.2 மில்லியன் யூரோ (சுமார் 6 மில்லியன் வெள்ளி).
ஓவியங்களுக்குச் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர். ஓர் ஓவியத்தின் துணி கிழிந்திருக்கிறது.
ஓவியங்களை மீண்டும் காட்சிக்கு வைப்பதற்கு முன் அவற்றைச் சீரமைக்க வேண்டியுள்ளது.
திருட்டின் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் பிரான்சில் உள்ள மற்றொரு முக்கிய கலை அருங்காட்சியகத்திலும் திருட சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பிரான்சில் அண்மைக்காலமாகப் பிரபலமான கலைப் படைப்புகள் அவ்வப்போது திருடுபோகின்றன. அதனால் அருங்காட்சியகங்களின் பாதுகாப்புக் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

ஆதாரம் : AFP