வாழ்வியல் trending
5 குழந்தைகள், 36 மணி நேரப் பயணம் - உதவிக்கு வந்த முன்பின் தெரியாதவர்கள்
வாசிப்புநேரம் -
Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள், ரயில் பயணிகளின் செல்லப் பிள்ளைகளாக மாறியுள்ளன.
ஓர் ஆண், நான்கு பெண் என ஐந்து குழந்தைகளும் பிப்ரவரி மாதம் பிறந்தன.
பிள்ளைகளோடு பெற்றோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.
3,500 கிலோமீட்டர் தூரம் கொண்ட ரயில் பயணம் அது. பயணம் 36 மணி நேரம் பிடித்தது.
அந்தப் பயணத்தில் ஐந்து குழந்தைகளையும் பராமரிப்பது பெற்றோருக்குச் சவாலாக இருந்தது.
ஆனால் ரயில் ஊழியர்களும் சக பயணிகளும் உதவ முன்வந்தனர்.
குழந்தைகளுக்குப் பால் கொடுப்பது, தூங்கவைப்பது எனப் பொறுப்புகளைப் பயணிகள் பகிர்ந்துகொண்டனர்.
குழந்தைகள் அழும்போதெல்லாம் மேல் படுக்கையிலிருந்து இறங்கி உதவினார் ஒரு பெண் பயணி. அவருக்குப் பெற்றோர் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தனர்.
வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஒருவருக்கொருவர் உதவுவதுதானே முறை என்று அந்தப் பெண் பதில் சொன்னார்.
ஐந்து குழந்தைகளைக் காணப் பயணிகள் வரிசையில் நின்ற காணொளிகளும் இணையத்தில் பரவின.
36 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு குடும்பம் சொந்த ஊரான ஷின்ஜியாங்கைச் சென்றடைந்தது.

ஆதாரம் : South China Morning Post