Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'பூனை' வடிவில் தோசை....அசந்துபோன இணையவாசிகள்; சாலையோரக் கடைக்காரருக்குப் பாராட்டு

வாசிப்புநேரம் -
தோசை......மிகவும் பிரபலமான இந்திய உணவுகளில் ஒன்று.

சாலையோரக் கடை முதல் பெரிய உணவகங்கள் வரை தோசை இல்லாத இடங்களே இல்லை எனலாம்.

பொதுவாக தோசை வட்டமாக இருக்கும். ஆனால் கலைநயத்துடன் தோசை சுட்டு தமது வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளார் இந்தியாவில் சாலையோர உணவுக் கடை நடத்தும் ஆடவர்.

அவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது.

அவர் சுட்டது 'பூனை' வடிவிலான தோசை. அதன் 2 நிமிடக் காணொளிப் பதிவை மனோஜ் குமார் என்பவர் Twitterஇல் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்தக் காணொளி WhatsApp செயலி வாயிலாகவும் வேகமாகப் பரவியது.

பெரிய சமையல்காரர்களைவிட, சாலையோரமாய் உணவுக் கடை நடத்துபர்கள் மிகவும் வித்தியாசமாக யோசிக்கக்கூடிய திறன்பெற்றவர்கள் எனத் தாம் கருதுவதாகவும் மனோஜ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களது திறமையைப் பாரட்டியே ஆக வேண்டும் என்றும் மனோஜ் கூறினார்.

அந்தக் காணொளி 48,000 தடவைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கனக்கான கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.

-- "சீஸ் (cheese), மயோனீஸ் (Mayonnaise), ஓரியோ (Oreo) முதலியவற்றைப் போட்டு தோசையைச் சேதப்படுத்தாத வரை பரவாயில்லை"

--"இந்த "wow" சமையல்காரரை" எங்கே தேடுவது?"

-- "நம்பமுடியாத மனிதரிடம் நம்பமுடியாத திறமை"
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்