Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மாட்டுப் பாலுக்குப் பதில் வேறு என்ன பால் வகைகளைக் குடிக்கலாம்?

வாசிப்புநேரம் -
மாட்டுப் பாலுக்குப் பதில் வேறு என்ன பால் வகைகளைக் குடிக்கலாம்?

(படம்: Pixabay)

சிலர் உடல் ஆரோக்கியம் காரணமாக மாட்டுப் பாலைத் தவிர்க்கலாம்.

வேறு சிலரோ தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக மாட்டுப் பால் குடிக்காமல் இருக்கலாம்.

அவர்களுக்காகவே தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பால்கள் பல விற்பனை செய்யப்படுகின்றன.

அரிசிப் பால், தேங்காய்ப் பால், முந்திரிப் பால், hazelnut பால், பாதாம் பால், ஓட்ஸ் பால், சோயா பால் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், மாட்டுப் பாலில் உள்ள பலன்கள் அனைத்தும் மற்ற வகைப் பால்களில் உண்டா?

கடைகளில் மாட்டுப் பாலுக்குப் பதிலாக அதிகம் பயன்படுத்தப்படும் பாதாம், ஓட்ஸ், சோயா பாலை ஆராய்ந்து பார்ப்போம்...

  • புரதச் சத்து (protein)?

மாட்டுப் பாலில் தான் ஆக அதிகம்.

மாட்டுப் பாலில் உள்ள புரதச் சத்தில் பாதி அளவு சோயா பாலில் உள்ளது.

அதற்கு அடுத்த நிலையில், ஓட்ஸ் பாலும் பாதாம் பாலும் இருப்பதாக அமெரிக்க வேளாண் துறை கூறியது.

  • மாவுச்சத்து (carbohydrate)?

மாவுச்சத்து ஆகக் குறைவாகவுள்ள பால், பாதாம் பால்.

மாட்டுப் பாலைத் தவிர்த்து, ஓட்ஸ் பாலில் ஆக அதிக மாவுச்சத்து உள்ளது.

  • இனிப்பு?

ஆக அதிக இனிப்பு: மாட்டுப் பால்

ஆகக் குறைவான அளவு இனிப்பு: ஓட்ஸ் பால்

  • ஊட்டச்சத்து?

மாட்டுப் பாலில் தான் ஆக அதிக ஊட்டச்சத்து உள்ளதாக Gleaneagles மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதற்கு அடுத்துச் சிறந்தது, சோயா பால்.

மேலும், சந்தையில் விற்கப்படும் பாதாம், ஓட்ஸ் பால்களில் சுவையை மேம்படுத்தக்கூடிய பொருள்கள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்