Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திடீரென்று குளிராகவும் திடீரென்று சூடாகவும் உள்ளதா? ஏன்?

வாசிப்புநேரம் -

ஒரு நாள் திடீரென்று குளிராகவும்... இன்னொரு நாள் சூடாகவும் உள்ளதா?

சிங்கப்பூரில் அண்மை நாள்களாக இத்தகைய வானிலை வழக்கமாக உள்ளது...

காரணம் என்ன? அது குறித்து சுற்றுப்புற ஆர்வலர் திரு. வெங்கட்ராமனிடமிருந்து விளக்கம் கேட்டது, செய்தி.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம், பொதுவாக ஆண்டின் ஆகச் சூடான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆகக் குறைவான மழைப் பொழிவுகொண்ட மாதங்களில் ஒன்றாகவும் அது உள்ளது.

வெப்பநிலை பொதுவாக 25 டிகிரி செல்சியஸுக்கும் 31 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

அப்படி என்றால் ஏன் இந்தத் திடீர் குளிர்... மழை ஏன்?

தென்மேற்குப் பருவமழை

சிங்கப்பூரிலும் சுற்று வட்டாரத்திலும் தென்மேற்குப் பருவமழை தொடர்கிறது.

தென்கிழக்கு அல்லது தென்மேற்குப் பகுதிகளிலிருந்து காற்று வீசக்கூடும்.

வட்டாரத்தில் வீசும் காற்றின் காரணமாக சில நாள்களில் காலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

இம்மாத முற்பாதியை விடப் பிற்பாதியில், அதிக மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

அடுத்த சில மாதங்களிலும் கனத்த மழையை எதிர்பார்க்கலாம்.

La Nina எனும் பருவநிலை நிகழ்வு

La Nina பருவநிலை நிகழ்வால் தென்கிழக்காசியாவில் பொதுவாகக் கூடுதல் மழையையும் குளிரான தட்பநிலையையும் எதிர்பார்க்கலாம்.

அந்தப் போக்கு அடுத்த சில மாதங்களுக்கும் தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்