கரும்பு - தகவல்கள் தெரியுமா?
This audio is generated by an AI tool.
பொங்கல் பண்டிகைக்குப் பொலிவும் தித்திப்பும் சேர்க்கிறது கரும்பு.
பொங்கல் திருநாளன்று அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
கரும்பு பற்றிய சில சுவைத் தகவல்கள்..
அறுவடை
- கரும்புப் பயிரின் வயது, வகை ஆகியவற்றைப் பொறுத்தது
- வழக்கமாகத் தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை (ஜனவரி - ஏப்ரல்) அதன் முக்கிய அறுவடைக் காலமாகக் கருதப்படுகிறது.
- பொங்கல் திருநாள் காலத்தில் கரும்பின் அறுவடை முழுவீச்சில் நடக்கும்.
- கரும்புக்கு விதைகள் உண்டு. ஆனால் வழக்கமாக விவசாயத்தில் தண்டின் பகுதிகள் நடப்பட்டுக் கரும்பு வளர்க்கப்படுகிறது.
பாடங்களைப் புகட்டும் கரும்பு
கரும்பின் நுனி (இலைகள் இருக்கும் பகுதி) இனிப்பாக இருக்காது. அடிக் கரும்பு மிகவும் இனிப்பாக இருக்கும்.
அப்படித்தான் வாழ்க்கையில் முன்னேறத் தொடக்கத்தில் கடின உழைப்பு முக்கியம் (நுனியைக் குறிக்கிறது). அது சிரமமாக இருக்கும்.
ஆனால் நாளடைவில் வெற்றியாக மாறும்போது அது தித்திப்பாக இருக்கும் (அடிக் கரும்பைக் குறிக்கிறது).
கரும்பின் வெளிப்புறம் கரடுமுரடாக இருக்கும்.
கடின உழைப்பைப் போட்டு அதை உரித்தால் மட்டுமே இனிப்பான சாறு கிடைக்கும்.
சில கரும்பு வகைகள்
செங்கரும்பு - கருமை கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். சாப்பிட மட்டும் தயாரிக்கப்படுகிறது
கருப்புக் கரும்பு - சாதாரணக் கரும்பை விட அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இதன் சாறு சர்க்கரைத் தயாரிப்புக்கும் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பச்சைக் கரும்பு - பசுமையான, இளம் கரும்பைக் குறிக்கிறது. இனிப்புச்சத்து நிறைந்தது. ஆரோக்கிய நன்மைகள் கொண்டது