Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மூக்கடைப்புக்கு நிவாரணம்? மூக்கு வழி செல்லும் சிறிய இயந்திரக் கருவிகள்

வாசிப்புநேரம் -
மூக்கடைப்புக்கு நிவாரணம்? மூக்கு வழி செல்லும் சிறிய இயந்திரக் கருவிகள்

படம்: envato.com

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் புலம்புவர்...

மருந்தே அதற்கு நிவாரணம் என்ற நிலை விரைவில் மாறலாம்...

அதற்கெனப் புதிய தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தூசுத் துகளின் அளவில் இயந்திரக் கருவிகள்...

அவற்றை மூக்குக்குள் விட்டால் மூக்கடைப்பு தீர்ந்துவிடலாம் என்று சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக மூக்கின் உள்பகுதி வீங்குவதால் மூக்கடைப்பு ஏற்படுவதுண்டு...

பாக்டீரியா அதற்குக் காரணமாய் இருந்தால் இயந்திரக் கருவிகள் அதைக் கொன்றுவிடும் என்று Science Robotics சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டன.

பன்றிகளிடமும் முயல்களிடமும் நடத்தப்பட்ட சோதனையில் பாக்டீரியா வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

விலங்குகளின் தசையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

இன்னும் 5,10 ஆண்டுகளில் இயந்திரக் கருவிகள் வழக்கமான சிகிச்சை முறைக்கு மாற்றாக அமையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மனிதர்களிடம் இயந்திரக் கருவிகளைப் பயன்படுத்தும்போது ஊடுகதிர் கருவிகள் (X-ray) மூலம் மருத்துவர்கள் அவற்றைக் கண்காணிக்கமுடியும் என்று கூறப்படுகிறது.

மூக்கில் மட்டுமல்ல குடல், சிறுநீர்ப்பைகள் ஆகியவற்றிலும் இயந்திரக் கருவிகள் மூலம் சிகிச்சையளிக்கலாம்.

சிகிச்சைக்குப் பிறகு தும்மல் மூலம் மனிதர்கள் இயந்திரக் கருவிகளை வெளியேற்றலாம் என்று The Guardian செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

எனினும் சில கருவிகள் உடலிலேயே தங்கிவிடலாம் என்ற அக்கறையும் எழுந்துள்ளது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்