Skip to main content
"சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டனைச் சேர்ந்த உணவா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டனைச் சேர்ந்த உணவா?" - கொந்தளிக்கும் இந்தியர்கள்

வாசிப்புநேரம் -
Taste Atlas எனும் உணவுமுறை, விமர்சனத் தளம் உலகின் 50 சிறந்த கோழி உணவு வகைகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியக் கோழி உணவு வகைகள் பல இடம்பெற்றுள்ளன.

4ஆவது இடத்தில்: பட்டர் சிக்கன்
6ஆவது இடத்தில்: சிக்கன் டிக்கா
10ஆவது இடத்தில்: சிக்கன் 65
18ஆவது இடத்தில்: தண்டூரி சிக்கன்

இவை அனைத்தும் இந்தியாவைச் சேர்ந்த உணவு வகைகள் என Taste Atlas குறிப்பிட்டிருந்தது.

ஒன்றைத் தவிர...

21ஆவது இடத்தில் இருந்த சிக்கன் டிக்கா மசாலா மட்டும் பிரிட்டனைச் சேர்ந்த உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதைப் பார்த்த இந்தியர்கள் பலரும் கொந்தளித்துவிட்டனர்.

"இந்திய உணவான சிக்கன் டிக்கா மசாலா எப்படி பிரிட்டனைச் சேர்ந்ததாகும்?"

எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

உணவையுமா பிரிட்டன் ஆக்கிரமித்துவிட்டது எனச் சிலர் கிண்டல் செய்தனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்