Skip to main content
10 வயதுச் சிறுவனின் ஆரோக்கியப் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

10 வயதுச் சிறுவனின் ஆரோக்கியப் பயணம்

வாசிப்புநேரம் -
துன்புறுத்தலை எதிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த எண்ணும் 10 வயதுச் சிறுவனின் குறிக்கோளை மில்லியன் கணக்கானோர் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.

இங்கிலாந்தின் வார்விக்ஷர் (Warwickshire) வட்டாரத்தில் உள்ள வெலஸ்பர்ன் (Wellesbourne) எனும் பகுதியில் ஜேக்கப் உடற்பயிற்சி நிபுணர்களின் உதவியை நாடி வருகிறார்.

அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளிகளை 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இவ்வளவு ஆதரவு கிடைத்தது பிரமிப்பாக உள்ளது என்று ஜேக்கப் கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

"முதலில் பார்க்கும்போது 100 அல்லது 200 கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்றார் ஜேக்கப்.

"இதற்கு முன் அவனுடைய ஆர்வம் PlayStation, Xbox போன்ற விளையாட்டுகளில் இருந்தது. இப்போது விரைவு உணவகங்களில் உணவை வாங்கிச் சாப்பிடுவதில்லை" என்று கூறினார் ஜேக்கபின் தாயார்.

சிறுவனின் முனைப்பு பலருக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்