திருப்பு வளையம் இல்லை... மிதிப்படியும் இல்லை... தானாக ஓடக்கூடிய கார்...
Tesla தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் (Elon Musk) நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Robotaxi என்கிற காரில் திருப்பு வளையமும் (steering wheel) கிடையாது... மிதிப்படியும் (pedals) கிடையாது...
முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய அந்தக் கார் 2027ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்றார் மஸ்க்.
அதன் விலை 30,000 டாலருக்குக் குறைவாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மனிதர்கள் ஓட்டிச்செல்லும் கார்களைவிட அது சுமார் 20 மடங்கு அதிகப் பாதுகாப்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே அத்தகைய 50 கார்களை Tesla தயாரித்துவிட்டதாக மஸ்க் பகிர்ந்தார்.
அடுத்த ஆண்டு அதற்கான சோதனை நடைபெறும்.
Optimus என்கிற நடனமாடும் மனித இயந்திரங்களையும் அவர் காட்டினார்.
எதிர்காலத்தில் அது நட்புகொள்வது உட்படப் பல்வேறு செயல்களைச் செய்யும் என்றார் அவர்.
அதன் விலை சுமார் 20,000 டாலர் முதல் 30,000 டாலர் வரை இருக்கக்கூடும் என்று மஸ்க் தெரிவித்தார்.
அது எப்போது விற்கப்படும் என்பதை அவர் கூறவில்லை.