மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாயைத் தத்தெடுத்த தாய்லந்து இளவரசி
வாசிப்புநேரம் -

(படம்: Instagram)
தாய்லந்தில் மறைந்த முதலாளியை நினைத்துக் கடையொன்றின் வெளியில் காத்துக்கிடந்த நாய்க்குட்டியை அந்நாட்டு இளவரசி தத்தெடுத்துள்ளார்.
அந்த நாயின் பெயர் மூ டயேங் (MooDaeng). முதலாளி இறந்தபிறகு அவருக்காகப் பல வாரங்களாக அந்தக் கடையின் முன் தொடர்ந்த காத்திருந்தது நாய்க்குட்டி. இதனால் அது இணையத்தில் மிகவும் பிரபலமானது.
மூ டயேங்கைத் தாய்லந்து மன்னர் மஹா வஜ்ரலொங்கோனின் (Maha Vajiralongkorn) உறவினரான இளவரசி சிரிபா சுடாபோர்ன் (Siribha Chudabhorn) தத்தெடுத்தார்.
மூ டயேங்கின் முதலாளி வீடற்றவர். அவர் அந்தக் கடையிருக்கும் இடத்தில்தான் யாசகம் கேட்டுப் பிழைப்பு நடத்தி வந்தார் என்று The Strait Times செய்தியைச் சுட்டி Hindustan Times செய்தி வெளியிட்டது.
உடல்நலக் குறைவினால் மூ டயேங்கின் முதலாளி கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் மாண்டார். அன்றுமுதல் மூ டயேங் அந்தக் கடை வாசலிலேயே காத்திருந்தது.
கடை ஊழியர்கள் அதற்கு உணவும் விளையாட்டுப் பொம்மைகளும் கொடுத்துப் பராமரித்துவந்தனர்.
இந்நிலையில் இணையத்தில் அதன் கதையைப் படித்த மில்லியன் கணக்கான மக்கள் அதன் மீது இரக்கம் காட்ட ஆரம்பித்தனர். முதலாளி மீது அது கொண்ட விசுவாசத்தையும் பாரட்டினர்.
என்றாலும் மூ டயேங்கைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற கவலையையும் இணையவாசிகள் வெளிப்படுத்தினர்.
அப்போதுதான் 42 வயது இளவரசி சிரிபா மூ டயேங்கை தத்தெடுத்தார்.
அதற்கான ஆவணங்களையும் இளவரசி சமர்ப்பித்துள்ளார்.
மூ டயேங் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதை உணர முடிவதாகக் கூறிய இளவரசி அதனை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் அது சியாங் மாயிலுள்ள (Chiang Mai) இளவரசியின் இல்லத்துக்குக் கொண்டுசெல்லப்படும்.

ஆதாரம் : Others