விளம்பர அழகியாய் மாறிய தாய்லந்துத் துப்புரவு ஊழியர்
வாசிப்புநேரம் -

(படம்: IG/@nongchat)
தாய்லந்தில் துப்புரவு ஊழியராக இருந்த பெண் விளம்பர அழகியாக மாறியிருப்பது இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.
28 வயது மீன் (Meen) தனது இரு மகன்களைத் தனியாக வளர்க்கிறார்.
சாலையோரமாகச் சுத்தம் செய்துகொண்டிருந்த அவரை ஒரு ரஷ்ய நாட்டுப் புகைப்பட கலைஞர் படம்பிடித்தார்.
அந்தப் புகைப்படங்களை மீன்னிடம் காட்டினார். அதைக் கண்ட மீன் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்தார்.
பின் அந்தச் சந்திப்பைப் பற்றிய காணொளியைப் புகைப்படக் கலைஞர் இணையத்தில் பகிர்ந்தார்.
அதனை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் காண்டதாக South China Morning Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
திடீரென பிரபலமான மீன்னைத் தாய்லந்தின் பிரபல ஒப்பனைக் கலைஞர்களில் ஒருவரான நோங் சாட் (Nong Chat) அழைத்தார்.
விளம்பரங்களில் அழகியாகத் தோன்றும் வாய்ப்பை மீன்னுக்கு அளித்தார்.
தற்போது மிகப் பிரபலமான விளம்பர அழகியாக மாறியுள்ள மீன்னை ஒர் இயல்பான அழகி என இணையவாசிகள் வர்ணித்துள்ளனர்.
இன்னும் பலர் வறுமையில் வாடிய அவருக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டத்தால் வாழ்க்கை மாறிவிட்டதாக வியந்துள்ளனர்.

ஆதாரம் : South China Morning Post