Skip to main content
ஊசி ஓட்டையில் ஒட்டகங்கள்... கண் இமையால் சாயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஊசி ஓட்டையில் ஒட்டகங்கள்... கண் இமையால் சாயம்- கண்ணைக் கவரும் படைப்பு

வாசிப்புநேரம் -
ஊசியில் நூல் கோப்பதே சிலருக்கு மிகவும் கடினம்...

அந்தச் சிறிய ஓட்டையில் ஒருவர் கண்கவர் ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார்.

3 ஒட்டகங்கள்... ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ராஜா...

அதை உருவாக்கப் பல மணி நேரமானதாகக் கூறினார் சிற்பக் கலைஞர் வில்லர்ட் விக்கன் (Willard Wiggan).

"Three Little Kings in the Eye of a Needle" என்ற அந்தப் படைப்பை நுண்ணோக்கிக் கருவி மூலம் உருவாக்கியதாகவும் அவர் சொன்னார்.

அதற்கு வண்ணம் பூச அவர் பயன்படுத்தியது... கண் இமைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அந்தப் படைப்பை உருவாக்கியதாகத் திரு. விக்கன் Instagram பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிலுள்ள நட்சத்திரங்கள் ஒளிவீச வேண்டும் என்பதற்காக 24 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படைப்பு கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் அனைவருக்கும் ஒளியையும், நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டுவரும் என்று நம்புவதாகச் சொல்கிறார் திரு. விக்கன்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்